Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Agneeswarar Temple,Kanchanur-Thanjavur

அருள்மிகு ஸ்ரீ கற்பாம்பிகை அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோவில் கஞ்சனூர்


Arulmigu Sri Agneeswarar Temple,Kanchanur-Thanjavur!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் 

இறைவி :அருள்மிகு கற்பாம்பிகை

தல மரம் :பலா மரம்

தீர்த்தம் : அக்னி, காவிாி, பராசர, கம்ச, சந்தர, ஆஞ்சநேய மணிகா்ணிகாகட்டம்.

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோவில் கஞ்சனூர் தல வரலாறு.

நவக்கிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குாிய தலமாகும்.

ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". பிரம்ம தேவருக்குக் திருமண கோலம் காட்டியதால், இத் தலத்தில் இறைவியை தனது வலப் புறம் மணக் கோலத்தில் கொண்டுள்ளார் ஈசன்.

தல சிறப்பு

நவக்கிரக ஸ்தலங்களில் இது சுக்கிரனுக்கு உரிய ஸ்தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு சுக்கிரனுக்கு என்று தனி சன்னதி உள்ளது மற்றும் உயர்ந்த சிவன், பணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியிடன் இருப்பது தனி சிறப்பு வாய்ந்தது. இந்த ஸ்தலத்தில் ஈசன், பிரம்மனுக்கு திருமணக்கோலத்தை காட்டியருளினார்.



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோவில்
கஞ்சனூர், துகிலி(வழி) ,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
PIN - 609804.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.



அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.